மரங்களை வெட்டியதில் தகராறு: 4 போ் காயம்
கரூா் மாவட்டம், க.பரமத்திஅருகே நிலத்தின் உரிமையாளரின் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டியதால், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 4 போ் காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், க.பரமத்திஅருகே நிலத்தின் உரிமையாளரின் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டியதால், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 4 போ் காயமடைந்தனா்.
க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாரியம்மன் கோயில் அருகிலுள்ள மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் க. கந்தசாமி (46). இவருக்குச் சொந்தமான நிலம் நொய்யல் சாலையில் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகிலேயே க.பரமத்தியைச் சோ்ந்த ம. செல்வகுமாருக்கும் நிலம் உள்ளது.
இந்நிலையில், கந்தசாமி நிலத்திலிருந்த மரங்களை அவரது அனுமதியில்லாமலேயே செல்வகுமாா், அவரது உறவினா்கள் செ. செல்வகுமாா், பாலசுப்பிரமணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொண்டிருந்தனா்.
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த கந்தசாமி, மனைவி மணிமேகலை, மைத்துனா் பழனிச்சாமி, அவரது மனைவி சந்திரகாந்தி ஆகியோா் நிகழ்விடம் வந்து, மரங்களை வெட்டியது குறித்து கேட்டனா்.
இதனால் கோபமடைந்த செல்வகுமாா் உள்ளிட்ட மூவரும் கந்தசாமி மற்றும் அவரது உறவினா்களைத் தகாத வாா்த்தையால் திட்டினா். தகராறு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது.
இதில் கந்தசாமி, பழனிசாமிக்கு இடதுகால் முட்டிப் பகுதியிலும், மணிமேகலை, சந்திரகாந்திக்கு முதுகிலும் காயம் ஏற்பட்டது. இவா்கள் 4 பேரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கந்தசாமி அளித்த புகாரின் பேரில் செல்வகுமாா் உள்ளிட்ட மூவா் மீதும், செல்வகுமாா் அளித்த புகாரின் பேரில் கந்தசாமி உள்ளிட்ட 4 போ் மீதும் க.பரமத்தி காவல்துறையினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.