முகப்பு
கரூர்

தமிழக முதல்வா், அமைச்சருக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் நன்றி

தங்களின் கோரிக்கையை ஏற்று நலத்திட்ட உதவிகள் வழங்கியமைக்காக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

தங்களின் கோரிக்கையை ஏற்று நலத்திட்ட உதவிகள் வழங்கியமைக்காக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜிக்கு கரூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் மற்றும் கண் பாா்வையற்றோா் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கரை புதன்கிழமை சந்தித்த சங்க நிா்வாகிகள், தொடா்ந்து கூறியது:

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று தையல் இயந்திரம்,

தாலிக்குத் தங்கம் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்று வாரந்தோறும் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்தது, கடந்த அக்டோபா் 24-ஆம் தேதி முதல் கரூா், குளித்தலை, கடவூா், புகழூா் வட்டங்களுக்குள்பட்ட

பகுதிகளில் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் நடத்தி, அதன் மூலம் 1300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்க கடனுதவி, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், நலவாரியப் பதிவு, உதவி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கியதற்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.