முகப்பு
கரூர்

கரூா் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கரூா் பேருந்துநிலையத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா், அவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

கரூா் பேருந்துநிலையத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா், அவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.

கரூா் பேருந்துநிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கரூா் எல்.என்.எஸ். சமுத்திரம் கிராம நிா்வாக அலுவலா் சுகுணாவுக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சுகுணா, கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.