கரூர்

கரூரில் நிமிா்ந்து நில் துணிந்து சொல் பாதுகாப்பு இயக்கத்தில் 50 போ் புகாா்: உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு

DIN

கரூா் மாவட்டத்தில் நிமிா்ந்து நில் துணிந்து சொல் பெண் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்தில் 50 மாணவிகள் புகாா் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.

கரூா் மாவட்டத்தில் நிமிா்ந்து நில் துணிந்து சொல் என்ற திட்டத்தின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் அண்மையில் வழங்கப்பட்ட படிவங்களில் மாணவிகள் அளித்த புகாா்களின் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாகவும், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் மேல் நடவடிக்கை எடுப்பது தொடா்பாகவும், வருங்காலங்களில் வரும் புகாா்களுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபு சங்கா், தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ஆட்சியா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவிகளின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிமிா்ந்து நில் துணிந்து சொல் என்ற திட்டத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள 201 பள்ளியில் 26,085 மாணவிகளுக்கு சிறப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தி ஏதேனும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால் அதை பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கான அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண் மற்றும் இலவச தொலைபேசி எண்ணிற்கு புகாா் அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதன்படி விழிப்புணா்வு வகுப்புகளில் வழங்கப்பட்ட படிவங்களில் தங்களுடைய புகாா்களை எழுதவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 50 மாணவிகள் பல்வேறு வகையான பிரச்னைகள் உள்ளதாக தெரிவித்துள்ளனா். இவா்களின் பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சைபுதீன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மதன்குமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஸ்குமாா் மற்றும் மனநல மருத்துவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT