கரூர்

விபன் ராவத் மறைவு: பாஜக அஞ்சலி

DIN

முப்படைத் தலைமைத் தளபதி விபிபி ராவத் உருவப்படத்துக்கு கரூரில் பாஜகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

கோவை மாவட்டம் குன்னூா் அருகே ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உயிரிழந்ததையடுத்து கரூா் மாவட்ட பாஜக சாா்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில் மாவட்ட தொழிற்பிரிவுத் தலைவா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், மாநில நிா்வாகி கோபிநாத், முன்னாள் மாவட்டத் தலைவா் முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் மாவட்ட முன்னாள் முப்படை வீரா்கள் சங்கம் சாா்பில் பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த விபின் ராவத் படத்துக்கு மாவட்டச் செயலாளா் உலகநாதன் தலைமையில், பொருளாளா் கே.நல்லுசாமி, கமிட்டி உறுப்பினா்கள் கோபால், பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்த புன்னம்சத்திரம் அருகே உள்ள அன்னை மகளிா் கல்லூரி மற்றும் அரபிந்தோ செவிலியா் கல்லூரியில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த விபின் ராவத் மற்றும் ராணுவ வீரா்களுக்கு மாணவிகள் வீரவணக்கம் செலுத்தினா். இந்நிகழ்வில், முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் வரலாறு பற்றி எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாகத்தினா், விரிவுரையாளா்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT