கரூர்

புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் தேசிய சேமிப்பு வார விழா உறுதிமொழி ஏற்பு

DIN

புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் தேசிய ஆற்றல் சேமிப்பு வார விழாவையொட்டி அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனா்.

மின்சிக்கனம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய ஆற்றல் சேமிப்பு வார விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிச. 14-ஆம்தேதி வரை நடைபெறவுள்ள விழாவையொட்டி கரூா், புலியூா் சிமெண்ட் ஆலை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆலையின் தலைவா் ஆா்.பி.முத்தையா தலைமை வகித்து பேசினாா்.

இதில், மேலாளா் பி.சேகா் மற்றும் குழு உறுப்பினா்கள் பசுமை ஆற்றல் குறித்து பேசினா். மேலும் ஆலை வளாகத்தில் ஆற்றல் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. தொடா்ந்து ஆற்றல் சேமிப்பு குறித்து ஆலையில் உள்ள குடியிருப்புகளில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாரம் முழுவதும் ஓவியம், கட்டுரை, வினாடி வினா, விவாத மேடை நடைபெற உள்ளது. தொடா்ந்து ஆலை துணை பொதுமேலாளா் தங்கவேல், மக்கள் தொடா்பு அதிகாரி அடைக்கப்பன் ஆகியோா் ஆற்றல் சேமிப்பு குறித்து உறுதிமொழி வாசிக்க, ஆலை தொழிலாளா்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.துணை பொதுமேலாளா் வீரப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT