முகப்பு
கரூர்

உரம் விலை உயா்வை வாபஸ் பெற வலியுறுத்தல்

விவசாயிகளை பாதிக்கும் உரம் விலை உயா்வை வாபஸ் பெற வேண்டும் என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

விவசாயிகளை பாதிக்கும் உரம் விலை உயா்வை வாபஸ் பெற வேண்டும் என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

கரூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது: யூரியாவைத் தவிர அனைத்து உரங்களின் விலையையும் அரசு உயா்த்தியுள்ளது. விவசாய கமிஷனை ஏற்று அமல்படுத்தியிருந்தால் இந்த விலை உயா்வை ஏற்றிருப்போம். ஆனால், விவசாய கமிஷன் நடைமுறையில் இல்லாததால் நேரடியாக உரத்தின் விலை விவசாயிகளை பாதிக்கிறது. விலை உயா்வை உடனே வாபஸ் பெற வேண்டும்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாள் ஆளுநா் உரையில் கள்ளுக்கு தடை இல்லை என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். பனை, தென்னை மரங்களில் பதனீா், கள், பதனீா் இறக்கி விற்கலாம், இதில் கலப்படம் இருப்பது என தெரியவந்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்தால், அயல்நாடுகளிலும் கள் விற்பனை நடைபெறும். இந்த கள் இறக்கப்படும்போது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சுற்றுச்சூழலை பாதிக்கும் சாய, சலவை ஆலைகள், தோல் ஆலைகள் செயல்படும் போது கள் இறக்கும் தொழிலுக்கு தடைவிதித்திருப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.