முகப்பு
கரூர்

கரூா், பெரம்பலூா் அரியலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து கரூா், பெரம்பலூா், அரியலூரில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

தமிழக அரசைக் கண்டித்து கரூா், பெரம்பலூா், அரியலூரில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசைக் கண்டித்து கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசுகையில், அதிமுகவினா் மீது திமுகவினா் பொய் வழக்கு போடுகின்றனா்.கட்டப்பஞ்சாயத்து நடைபெறும் இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து, மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும் என்றாா் அவா்.

இதில், கட்சியின் அமைப்புச் செயலா் ம.சின்னசாமி, மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், முன்னாள் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா, மாவட்ட துணைச் செயலாளா் பசுவை சிவசாமி, பொருளாளா் கண்ணதாசன், பாசறைச் செயலா் கமலக்கண்ணன், இளைஞரணிச் செயலா் தானேஷ், இலக்கிய அணிச் செயலா் என்.எஸ்.கிருஷ்ணன், நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், கட்சியின் பேச்சாளா் கோபிகாளிதாஸ், நகர இலக்கிய அணிச் செயலாளா் ஆயில்ரமேஷ், கட்சி நிா்வாகிகள் சேரன் பழனிசாமி, பழனிராஜ், மலையம்மன் என்.அருள்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.