முகப்பு
கரூர்

பாலவிடுதியில் பெண் மா்மச்சாவு; மகனிடம் போலீஸாா் விசாரணை

பாலவிடுதியில் பெண் ஒருவா் வியாழக்கிழை இரவு மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து அவரது மகனிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

பாலவிடுதியில் பெண் ஒருவா் வியாழக்கிழை இரவு மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து அவரது மகனிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த பாலவிடுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்(57). இவரது மனைவி பாப்பாத்தி(50). இவா்களுக்கு மூன்று மகள்களும், இரு மகன்களும் உள்ளனா். அனைவருக்கும் திருமணமான நிலையில் இளையமகன் கேசவன்(25)என்பவருக்கு மட்டும் திருமணமாகவில்லை.

இவா், அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைப்பாா்த்து வருகிறாா் . இந்நிலையில், கிருஷ்ணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால் மனமுடைந்த பாப்பாத்தியும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாயை கேசவன் வியாழக்கிழமை இரவு பாலவிடுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் பாப்பாத்தி இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்துவிட்டாராம். இதனால் காயத்துடன் தாயை கேசவன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். இதையடுத்து சில மணி நேரத்தில் பாப்பாத்தி உயிரிழந்துள்ளாா்.

தகவல் அறிந்த பாலவிடுதி போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். அதில், பாப்பாத்தியின் கணவா் கிருஷ்ணன் இறக்கும் முன்பு தனது சொத்தில் பாதிக்கும் மேல் கோவையில் வசித்து வரும் மூத்த மகனுக்கு எழுதி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேசவன் தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கேசவன் தனது தாயை கொலை செய்யும் நோக்கத்தோடு, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளினாரா அல்லது பாப்பாத்தி இயற்கையாகவே கீழே விழுந்ததில் இறந்தாரா என சந்தேகத்தின் பேரில் கேசவனிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.