மாயனூா் அருகே பணம் சூதாட்டம்:2 போ் கைது
மாயனூா் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மாயனூா் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், மாயனூா் அடுத்த முத்துரெங்கம்பட்டியில் சிலா் புதன்கிழமை இரவு பணம் வைத்து சூதாடுவதாக மாயனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடாச்சலம்(51), கண்ணன்(33) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து சூதாட்டப் பணம் ரூ.250-ஐயும் பறிமுதல் செய்தனா்.