முகப்பு
கரூர்

வெள்ளியணை அருகே பஞ்சாலையில் தீ விபத்து

 வெள்ளியணை அருகே பஞ்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

 வெள்ளியணை அருகே பஞ்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின.

கரூா் மாவட்டம், வெள்ளியணை அடுத்த லட்சுமிபுரத்தில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாலையில் வியாழக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த கரூா் தீயணைப்பு நிலையத்தினா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் விவேகானந்தன் தலைமையில் உதவி அலுவலா் ம.சந்திரகுாா், நிலைய அலுவலா் விஜயகுமாா் மற்றும் தீயணைப்புவீரா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை போராடி அணைத்தனா். இதில், பல லட்சம் மதிப்பில் பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின. தீ விபத்தானது மின் கசிவால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.