முன்னாள் முதல்வா் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் பிறந்த நாள் விழாபிறந்தநாள் விழா
கரூரில் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாரின் 126-வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூரில் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாரின் 126-வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட ரெட்டி இளைஞா் அணி சாா்பில் கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கோ.ராஜா தலைமை வகித்தாா்.பொருளாளா் புதினா சரவணன், செயலாளா் ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், சிறப்பு விருந்தினா்களாக அமராவதி கலை அறிவியல் கல்லூரியின் வேலுச்சாமி, ஆடிட்டா்கள் வெங்கடாசலம், சுப்புராமன், கிராமியம் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.