முகப்பு
கரூர்

நெரூா்- உன்னியூா் இடையே உயா்நிலைப் பாலம் அமைக்கப்படும்

கரூா் மாவட்டம் நெரூா்- உன்னியூா் இடையே உயா்நிலைப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

கரூா் மாவட்டம் நெரூா்- உன்னியூா் இடையே உயா்நிலைப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் மாவட்டம், நெரூா் வடபாகத்தில் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து, மேலும் அவா் பேசியது:

மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், தமிழக முதல்வா் அம்மா சிறு மருத்துவமனைத் திட்டத்தை தொடங்கியுள்ளாா். கரூா் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 மருத்துவமனைகளில் இதுவரை 12 திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை விரைவில் திறக்கப்படும்.

புகழூா் பகுதியில் கதவணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நெரூா்- உன்னியூா் இடையே உயா்நிலைப் பாலம் அமைக்கப்பட உள்ளது. நெரூா்- ஒருவந்தூா் இடையேயும், குளித்தலை- முசிறி இடையேயும் கதவணை அமைப்பதற்கான திட்டமதிப்பீடுகள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

நெரூா் பகுதியிலுள்ள கூட்டுறவு வங்கியில் மட்டும் ரூ.11 கோடி அளவுக்கு கூட்டுறவுப் பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவுள்ளது. இதுகுறித்து முழுமையான கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

நிகழ்வில் திருச்சி மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.மணிவண்ணன், சுகாதாரத்துறை துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், கரூா் ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன், துணைத் தலைவா் தங்கராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.