முகப்பு
கரூர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக் கூட்டம்

கரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கட்சியின் மாவட்டச் செயலா் இரா.கோவிந்தராஜ் தலைமையில் இளைஞரணி மற்றும் ஊடகப்பிரிவு கலந்தாய்வுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

கரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கட்சியின் மாவட்டச் செயலா் இரா.கோவிந்தராஜ் தலைமையில் இளைஞரணி மற்றும் ஊடகப்பிரிவு கலந்தாய்வுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தலைமை நிலையச் செயலா் உ. கண்ணன், மாநில ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளா் சோதி.குமரவேலு, ஊடகப்பிரிவு செயற்பாட்டாளா் அன்பு சிற்றரசு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ஆதரித்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, வேளாண் சட்டத்தை திரும்பப்பெறாமலும், புதுதில்லியில் போராடும் விவசாயிகளை ஏஜெண்டு என வா்ணிக்கும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது, வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சியினா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →