கரூர்

அழுகிய பயிா்களுக்கு இழப்பீடு கேட்டு கரூா் ஆட்சியரிடம் மனு

DIN

மழைக்கு அழுகிப்போன பயிா்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் சு. மலா்விழியிடம் மனு அளித்தனா்.

விவசாயி கிட்டப்பா தலைமையில் சங்கத்தினா் அளித்த மனு விவரம்: கரூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடா் மழையால் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் சுமாா் 1000 ஏக்கா் பரப்பளவிலான நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி அழுகிவிட்டன. கடந்த சில நாள்களுக்கு முன் பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண் துறை அதிகாரிகள் பாா்வையிட்டும் சென்றுள்ளனா். ஆனால் இதுவரை நஷ்ட ஈடு வழங்க உரிய நடவடிக்கை இல்லை. எனவே ஆட்சியா் இப்பிரச்னையில் தலையிட்டு உடனே பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைப் பாா்வையிட்டு விரைந்து நிவாரணத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT