கரூர்

பூலாம் வலசில் இன்று முதல் 3 நாள்களுக்கு சேவல் சண்டை: ஆட்சியா் தகவல்

DIN

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசில் வழக்கம்போல் நிகழாண்டும் புதன்கிழமை (ஜன.13) முதல் மூன்று நாள்களுக்கு சேவல் சண்டை நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி பூலாம்வலசில் பாரம்பரியமாக சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நிகழாண்டும் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 15 வழிமுறைகளை பின்பற்றியும், கரோனா பரவுதலை தடுக்கும் வகையிலான அரசின் வழிகாட்டுதலின்படியும் சேவல் சண்டை புதன்கிழமை (ஜன.13) முதல் மூன்று நாள்கள் நடைபெறும். சேவல் சண்டையை பாா்வையிட வருபவா்களும், சேவலை கொண்டு வருபவா்களும் கட்டாயம் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். போட்டியாளா்கள் போட்டியின் விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT