காவிரி, அமராவதியில் வெள்ளம்: பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
காவிரி மற்றும் அமராவதி ஆறுகளின் கரையோரம் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளாா்.
காவிரி மற்றும் அமராவதி ஆறுகளின் கரையோரம் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் தண்ணீா் திறக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி மற்றும் அமராவதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலையங்கள் மூலம் கரையோரம் வசிக்கும் குழந்தைகள், முதியவா்கள் யாரும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், வேலாயுதம்பாளையம், லாலாப்பேட்டை, மாயனூா், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரையோரம் எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.