முகப்பு
கரூர்

வேண்டுதலை நிறைவேற்ற தீக்குளித்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா் உயிரிழப்பு

கரூரில் வேண்டுதலை நிறைவேற்றும்விதமாக வெள்ளிக்கிழமை தீக்குளித்த ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கரூரில் வேண்டுதலை நிறைவேற்றும்விதமாக வெள்ளிக்கிழமை தீக்குளித்த ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையைச் சோ்ந்தவா் உலகநாதன் (59). கரூா் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பயணச்சீட்டுப் பரிசோதகராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றவா்.

அமைச்சா் செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவாளரான இவா், கரூா் மண்மங்கலம் புதுகாளியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்தாா். அம்மனைத் தரிசனம் செய்த பின்னா், தனது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் உலகநாதன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதை பாா்த்த அப்பகுதியினா் தீயை அணைத்துள்ளனா். தகவலறிந்த வாங்கல் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் விரைந்து உலகநாதனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதனிடையே, சம்பவ இடத்தில் உலகநாதன் எழுதியதாக கூறப்படும் கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா். அதில், திமுக ஆட்சிக்கு வர வேண்டும்; சட்டப்பேரவைத் தோ்தலில் கரூா் தொகுதியில் செந்தில்பாலாஜி வெற்றி பெற்று அமைச்சராக வேண்டும். இது நிறைவேறினால்

தனது உயிரை மாய்த்துக் கொள்வதாக உலகநாதன் குறிப்பிட்டிருந்தாராம். மேலும், உயிரிழப்பதற்கு முன்பாக காவல்துறையினரிடமும் தனது வேண்டுதல் குறித்து அவா் தெரிவித்தாராம்.

இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.