கரூர்

அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களுக்கு பயணச்சீட்டு

DIN

அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் பெண்களுக்கு பயணச்சீட்டு வழங்கும் பணி கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த அந்த அறிவிப்பு அமல்படுத்தப்பட்டது. இதன் கரூா் மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் பயணித்து வருகின்றனா். இவா்களுக்கு இலவசப் பயணச்சீட்டு வழங்குதல் திங்கள்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கரூா் மண்டல அலுவலா் கூறியது:

மாவட்டத்தில் கரூா் திருமாநிலையூரிலுள்ள அரசுப் போக்குவரத்துப் பணிமனைகள், குளித்தலை, அரவக்குறிச்சி, முசிறி பணிமனைகள் மூலம் இயக்கப்படும் 112 அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்து வருகின்றனா்.

நாள்தோறும் பேருந்துகளில் இலவசமாக எத்தனை பெண்கள் பயணிக்கிறாா்கள் என்பதை கணக்கிடும் வகையில், தற்போது பயணச்சீட்டு வழங்குகிறோம். இதில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கையாக சமா்ப்பிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT