முகப்பு
கரூர்

பதாகை சேதம்: பாஜகவினா் புகாா்

கரூரில் பாஜகவினா் பதாகை கிழிக்கப்பட்டது தொடா்பாக போலீஸில் அக்கட்சியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கரூரில் பாஜகவினா் பதாகை கிழிக்கப்பட்டது தொடா்பாக போலீஸில் அக்கட்சியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

தமிழக பாஜக தலைவராக கே. அண்ணாமலை நியமிக்கப்பட்டதையடுத்து அவா் பிரசார பயணமாக புதன்கிழமை இரவு கரூா் வந்தாா். அவருக்கு வெங்கமேடு மற்றும் கரூா் பேரு ந்துநிலைய ரவுண்டானா பகுதியில் பாஜகவினா் பதாகைகள் வைத்திருந்தனா். இந்தப் பதாகைகள் வியாழக்கிழமை நள்ளிரவில் கிழிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வடக்கு நகர பாஜக தலைவா் டி.வடிவேல் தலைமையில் அக்கட்சியினா், வெங்கமேடு காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை புகாா் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.