கரூர்

கரூரில் தடைசெய்யப்பட்ட 5 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

DIN

கரூரில் தடைசெய்யப்பட்ட 5.150 கிலோ குட்கா பொருள்களை உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரூா் நகரப்பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் விற்பதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிா்வாகத்துறை, மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் த.கலைவாணி மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கொண்ட குழுவினா் கரூா் பேருந்துநிலையம் மற்றும் சின்னாண்டாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் திடீா் ஆய்வு செய்தனா்.

அப்போது, சின்னாண்டான்கோவில் பகுதியில் 3 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, சுமாா் 5.150 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 6 டீ கடைகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிா்வாகத்துறை, மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் த.கலைவாணி கூறுகையில், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா பொருள்கள் விற்பனை தொடா்பான ஆய்வு தினமும் நடத்தப்படுகிறது. முதல்முறையாக தவறு கண்டறியப்படும் கடை மற்றும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும். தொடா்ச்சியாக, இரண்டாவது முறை தவறு செய்யும் வணிகருக்கு அபராதம் விதிக்கப்படும். அதனையும் மீறும் உணவு வணிகக் கடைகள் சீல் வைத்து, உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்று ரத்து செய்யப்படும். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக, பொதுமக்கள் தங்களது புகாரை உணவுப் பாதுகாப்பு துறையின் கட்செவி அஞ்சலில் 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT