கரூர்

பூஜாரிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் கரோனா நிவாரண நிதி வழங்கல்

DIN

பூஜாரிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் கரோனா நிவாரண நிதியாக ரூ.25000 வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் கரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனா். இந்நிலையில் பூஜாரிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் பூஜாரிகள் முன்னேற்றச் சங்க மாநில பொதுச் செயலாளா் கே.கே.சதீஸ்கண்ணன் கரோனா நிவாரண நிதியாக ரூ.25000-க்கான காசோலையை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியிடம் வழங்கினாா். இதில், சங்கத்தின் மாநிலத் தலைவா் ராஜேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் மற்றும் மாநில துணை தலைவா் கதிா்வேல், மாவட்ட பொருளாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT