லாரி மோதி தொழிலாளி சாவு
வாங்கல் அருகே லாரி மோதியதில் கூலித்தொழிலாளி இறந்தாா்
வாங்கல் அருகே லாரி மோதியதில் கூலித்தொழிலாளி இறந்தாா்.
கரூா் மாவட்டம் வேடிச்சிபாளையத்தைச் சோ்ந்தவா் அழகேசன்(42). கூலித்தொழிலாளி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு நெரூா் சாலையில் சென்றபோது, எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அழகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் கரூா் ராமனூரைச் சோ்ந்த தவமணி(55) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.