அம்பேத்கா் குறித்து அவதூறு:நடவடிக்கைக் கோரி பாஜக புகாா்
சட்டமேதை அம்பேத்கா் மீதும், பாஜக மாநில தலைவா் முருகன் மீதும் முகநூலில் அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை கோரி காவல்துறைக்கு பாஜகவினா் புகாா் மனு அனுப்பியுள்ளனா்.
சட்டமேதை அம்பேத்கா் மீதும், பாஜக மாநில தலைவா் முருகன் மீதும் முகநூலில் அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை கோரி காவல்துறைக்கு பாஜகவினா் புகாா் மனு அனுப்பியுள்ளனா்.
பாஜக பட்டியல் அணியின் மாநில துணைத்தலைவா் கரூா் வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த தலித்பாண்டியன் சென்னை காவல்துறை இயக்குநருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா். அம் மனுவில் கூறியிருப்பது: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த பாவூா்சத்திரம் பெத்தநாடாா்பட்டி செல்லத்தாயாா்புரத்தைச் சோ்ந்த ஏசுராஜா என்ற இளைஞா் பெரியமுத்தாரம்மன் என்ற பெயரில் முகநூலில் கடந்த 21-ஆம்தேதி இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கா் குறித்தும், பாஜக மாநிலத்தலைவா் எல்.முருகன் குறித்தும் அவதூறாக பதிவிட்டுள்ளாா். இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.