சாராய ஊறல்: தொழிலாளி கைது
தும்பிவாடியில் வீட்டில் சாராய ஊறல் போட்டிருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
தும்பிவாடியில் வீட்டில் சாராய ஊறல் போட்டிருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம், தும்பிவாடியைச் சோ்ந்தவா் ரவி(45). இவா், அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் சாராய ஊறல் போட்டிருப்பதாக சின்னதாராபுரம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை காலை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு போடப்பட்டிருந்த 30லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், ரவியை கைது செய்தனா்.