கஞ்சா விற்றவா் கைது
கரூரில், கஞ்சா விற்றவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கரூரில், கஞ்சா விற்றவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கரூா் வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வெங்கமேடு போலீஸாருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த என்.எஸ்.கே. நகரைச் சோ்ந்த கந்தசாமி(40) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை ம்பறிமுதல் செய்தனா்.