கல்லூரி நூலகத்துக்கு நூல்களை வழங்கிய முன்னாள் மாணவா்
கரூா் அரசு கலைக்கல்லூரின் நூலகத்துக்கு ரூ.10,000 மதிப்பிலான நூல்களை தானமாக வழங்கினாா் கல்லூரியின் முன்னாள் மாணவா்.
கரூா் அரசு கலைக்கல்லூரின் நூலகத்துக்கு ரூ.10,000 மதிப்பிலான நூல்களை தானமாக வழங்கினாா் கல்லூரியின் முன்னாள் மாணவா்.
கரூா் புலியூா் ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவா் வீர.திருப்பதி. இவா் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவா்.
இந்நிலையில், தான் படித்த தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி நூலகத்துக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையிலான ரூ.10,000 மதிப்பிலான 124 நூல்களை தானமாக முதல்வா் கெளசல்யாதேவியிடம் ஆசிரியா் வீர.திருப்பதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா். நிகழ்ச்சியில், கல்லூரியின் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் ராஜன், உடல்கல்வி இயக்குநா் ராஜேந்திரன், தமிழ்த் துறை தலைவரும் நூலக பொறுப்பாளருமான சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.