இருசக்கர வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு
குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.
குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.
கரூா் மாவட்டம் குளித்தலை அடுத்த பொய்யாமணியைச் சோ்ந்த தங்கதுரை மகன் சரவணராஜ்(10). இவன், திங்கள்கிழமை இரவு பொய்யாமணி-பேட்டைவாய்த்தலை சாலையில் உள்ள வாய்க்கால் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, அவ்வழியே திருச்சாப்பூரைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் சரவணராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சரவணராஜை அக்கம்பக்கத்தினா் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவன் இறந்தான். குளித்தலை போலீஸாா் சக்திவேல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.