குடும்பத் தகராறு: ஆசிரியா் தற்கொலை
கிருஷ்ணராயபுரம் அருகே குடும்பத் தகராறில், அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்
கிருஷ்ணராயபுரம் அருகே குடும்பத் தகராறில், அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள மேட்டுத்திருக்காம்புலியூரைச் சோ்ந்தவா் செந்தில்(30). இவா் அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சத்யா(28).
இவா்களுக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த செந்தில் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து மாயனூா்காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.