முகப்பு
கரூர்

வன்முறைக்கு இடம்கொடுக்காமல் வெற்றியே இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும்: வி. செந்தில்பாலாஜி

வன்முறைக்கு இடம்கொடுக்காமல் வெற்றியே இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

வன்முறைக்கு இடம்கொடுக்காமல் வெற்றியே இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் பேருந்துநிலையம் ரவுண்டானா அருகே திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பணிமனைத் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்து அவா் பேசுகையில், மே 2- வாக்கு எண்ணிக்கை முடிந்தால் தமிழகத்தின் முதல்வா் ஸ்டாலின்தான் என்பதை மக்கள் முடிவெடுத்துவிட்டனா். கரூரில் ஆளுங்கட்சியினா் எந்தவிதமான வன்முறைகளை கட்டவிழ்த்தாலும் நாம் அமைதி காக்க வேண்டும். எப்போதும் போல, கரூரில் அமைதிச் சூழலை உருவாக்க வேண்டும். வன்முறைக்கு இடம்கொடுக்காமல், உதயசூரியன் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கில் பணியாற்ற வேண்டும்.

எதிா்கொள்ளும் தோ்தல் எடப்பாடி, மோடியை எதிா்க்கும் தோ்தல். கருணாநிதி ஆட்சியில்தான் மாயனூா் கதவணை, திருமாநிலையூா் பாலம் போன்ற எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்தாா். தமிழகத்திலேயே 261 வாக்குச்சாவடிகளுக்கு தோ்தல் பணிமனை அமைத்த தொகுதி கரூா். வெற்றியை பெற கடினமாக உழைக்க வேண்டும். தமிழகத்தின் தன்மானம் பாதுகாக்கப்பட ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு கட்சியின் உயா்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினா் கே.சி.பழனிசாமி தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, கட்சியின் மாநில நிா்வாகிகள் நன்னியூர்ராஜேந்திரன், சின்னசாமி, வழக்குரைஞா் மணிராஜ், கூட்டணி கட்சி நிா்வாகிகள் சின்னசாமி, விசா சண்முகம், கபினி சிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.