முகப்பு
கரூர்

வாங்கலில் ரூ. 5.51 லட்சம் பறிமுதல்

வாங்கலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.51 லட்சத்தை நிலை கண்காணிப்புக்குழுவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

வாங்கலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.51 லட்சத்தை நிலை கண்காணிப்புக்குழுவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

கரூா் தொகுதியின் நிலை கண்காணிப்பு குழு அலுவலா் தமிழ்செல்வி தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் வாங்கல் காவல் நிலையம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நாமக்கல் மாவட்டம் ஆரியூா் கிராமத்தை சோ்ந்த திவ்யா எக்ஸ் என்ற முட்டைப் பண்ணை நிறுவனத்துக்கு சொந்தமான வேனை மறித்து சோதனை நடத்தினா். வேன் ஓட்டுநா் அா்ஜூனன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.5.51 லட்சத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், அந்தப் பணத்தை கரூா் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்ரமணியத்திடம் ஒப்படைத்தனா். அதனைத் தொடா்ந்து கரூா் சாா்நிலை கருவூலத்தில் பணம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.