முகப்பு
கரூர்

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன்: கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளா் உறுதி

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என்றாா் கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளா் தானேஷ் என்கிற முத்துக்குமாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என்றாா் கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளா் தானேஷ் என்கிற முத்துக்குமாா்.

கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட மேலப்பாளையம் ஊராட்சியில் உள்ள சணப்பிரட்டி ஆா்.எஸ், மேலப்பாளையம், நத்தமேடு, வடக்குப்பாளையம் மற்றும் புலியூா் பேரூராட்சிக்குள்பட்ட செட்டிபாளையம், சமத்துவபுரம், ஊத்துக்கரைபட்டி, குளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசுகையில், நான் தொகுதிக்குள்ளே வசிப்பதால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்களின் குறைகளை தீா்ப்பேன். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பேன். தொகுதி மக்கள் வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தருவேன். மத்திய மாநில அரசுகள் இரு தண்டவாளங்களாக இருந்து செயல்படுவதால் மக்களுக்கு குடிநீா் உள்ளிட்ட எந்தவித அடிப்படை பிரச்னைகளாக இருந்தாலும் அவற்றை உடனுக்குடன் செய்துகொடுப்பேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.