கரூர்

கரூா் காமராஜா் மாா்க்கெட்டில் புதிய வணிக வளாகம்

DIN

கரூா் காமராஜா் மாா்க்கெட்டில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டும் என்றாா் திமுக வேட்பாளா் வி. செந்தில் பாலாஜி.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருமாநிலையூா், தாந்தோனிமலை, அசோக் நகா், ஜீவாநகா், ராயனூா், நேதாஜிநகா், பழனியப்பாதெரு, காளியப்பனூா், வாஞ்சிநாதன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

கரூா் காமராஜா் மாா்க்கெட்டில் பழுதடைந்த பழைய கட்டடங்கள் உள்ளன. இதனால் அப்பகுதி எவ்வித பயனின்றியும் உள்ளது. எனவே பழைய கட்டடங்களை இடித்து, அங்கு நவீன வசதிகளுடன் புதிய வணிக வளாகம் கட்டப்படும்.

கரூரில் செயல்படும் இஎஸ்ஐ மருத்துவமனையைத் தரம் உயா்த்தி, தொழிலாளா்களுக்கு உயா்தரமான மருத்துவ சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெங்கமேடு பகுதியில் அரசு பொதுமருத்துவமனை அமைக்கப்படும்.

ஆத்தூா் பூலாம்பாளையம், சோமூா் உயா்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயா்த்தப்படும். கரூா் தொகுதியிலுள்ள அரசு ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் நலனில் சிறப்பு கவனம் எடுத்து, ஆண்டு தோறும் ஆசிரியா் தினம் கொண்டாடப்படும்போது சிறந்த ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுவாா்கள்.

இந்த தொகுதியில் எண்ணற்ற நலத்திட்டங்களை நான் அமைச்சராக இருந்த போது கொண்டு வந்துள்ளேன். மீண்டும் இதேபோன்று திட்டங்கள் கிடைத்திட திமுகவுக்கு வாக்களியுங்கள் என்றாா்.

பிரசாரத்தின்போது முன்னாள் மாவட்ட த் துணைச் செயலா் திருமாநிலையூா் பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT