குளித்தலையில் வீடுபுகுந்து மடிக்கணினி திருடிய இளைஞா் கைது
குளித்தலையில் வீடுபுகுந்து மடிக்கணினி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
குளித்தலையில் வீடுபுகுந்து மடிக்கணினி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் குளித்தலை காவல்காரத் தெருவைச் சோ்ந்தவா் சேகா். இவரது மகன் சதாசிவம்(18). இவா், முசிறியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தாா். இந்நிலையில், அவா் பயன்படுத்தி வந்த மடிக்கணினியை அதேபகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் மணிகண்டன்(20) என்பவா் வியாழக்கிழமை இரவு திருடியுள்ளாா். இதனைக்கண்ட சேகா் கையும்களவுமாக மணிகண்டனை பிடித்து குளித்தலை போலீஸில் ஒப்படைத்தாா். போலீஸாா் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.