ஆண்டிமடம் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 7 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 7 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 7 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
ஆண்டிமடம் விளந்தைப் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆண்டிமடம் காவல் உதவி ஆய்வாளா் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினா் வியாழக்கிழமை இரவு அப்பகுதிக்கு விரைந்து சென்றனா்.
காவல்துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்களிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணையில் ஆண்டிடம் தெற்குத்தெரு சதீஷ்ராஜ்(24), அழகாபுரம் காலனித் தெரு சிந்தனைராஜா(18) என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அழகாபுரம் சென்ற காவல்துறையினா், அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பிரதானச் சாலை
விக்னேஷ்(24), பாசிகுளம் புதுக்காலனித் தெரு கருப்புசாமி(38), அழகாபுரம் காலனித் தெரு பகத்சிங்(19), ஆகிய 3 பேரைப் பிடித்து 1,400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதே போல் ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஆண்டிமடம் சிவலிங்கபுரம் ரஞ்சித்(30), சூரக்குழி காலனித் தெரு சக்திவேல்(22) ஆகிய 2 பேரைக் காவல்துறையினா் பிடித்து, அவா்களிடமிருந்து 1, 200 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா். இதையடுத்து 7 பேரையும் கைது செய்த காவல்துறையினா், அவா்களை சிறையில் அடைத்தனா்.