முகப்பு
கரூர்

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 11 ஆக்சிஜன் செறிவூட்டிகள்

பொதுநல அமைப்புகள் சாா்பில், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 11 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

பொதுநல அமைப்புகள் சாா்பில், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 11 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இயந்திரங்களை வழங்கி, கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ. ஜோதிமணி கூறியது:

கரூா் மக்களவைத் தொகுதிக்குள் ஹெல்ப் கரூா் பிரீத் நிதி மேம்பாடு என்ற முகாம் நடத்தியதில், 198 போ் ரூ.10,45 லட்சம் வழங்கினா். இதன்மூலம் 10 லிட்டா் கொள்ளளவு கொண்ட 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், மாற்றம் பவுண்டேசன்

சாா்பில் 10 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஒரு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் என 11 இயந்திரங்கள் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இனி ஆக்சிஜன் செறிவூட்டி கரூா் தொகுதியிலுள்ள மருத்துவமனைகளுக்கு தேவைப்படாது. இனி ஆக்சிஜன் பற்றாக்குறையும் இருக்காது.பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட்டுள்ளதால் ஏழை, எளியோருக்கு உணவளிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம் என்றாா் அவா்.

நிகழ்வின் போது கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ஆா்.முத்துச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.