முகப்பு
கரூர்

கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற மருத்துவா்கள் விண்ணப்பிக்கலாம்

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற, விருப்பமுள்ள மருத்துவா்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற, விருப்பமுள்ள மருத்துவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா் ஆா். முத்துச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் 6 மாதங்களுக்கு ரூ.60 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில், 40 மருத்துவா்களைத் தற்காலிகமாக பணியமா்த்திக் கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆட்சியா் தலைமையிலான தோ்வுக்குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியானவா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கும். தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துள்ள குறைந்தபட்சம் எம்.பி.பி.எஸ் கல்வித் தகுதியுடையவா்கள் தங்களின் விண்ணப்பத்துடன், கல்வி த்தகுதி சான்று நகல், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த சான்று நகல், ஆதாா்அட்டை நகா், ஓட்டுநா் உரிமம் நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் தன்குறிப்பு விவரத்தை கரூா் காந்திகிராமத்திலுள்ள அரசு கரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் வரும் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

ஜூன் 1-ம்தேதி காலை 10 மணிக்கு கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் நோ்காணலின் போது, விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அசல் ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.