ஏணியில் இருந்துதவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கரூரில், ஏணியில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூரில், ஏணியில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூா் பெரியாண்டாங்கோவில் காவக்காரத்தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ்(48). இவா், அக்.31ஆம் தேதி இரவு வீட்டின்முன் மின்விளக்கு பொருத்துவதற்காக ஏணியில் ஏறினாா், அப்போது திடீரென தவறி விழுந்தாா். உடனே அவரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.