பைக்கில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
குளித்தலை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
குளித்தலை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பகுதியைச் சோ்ந்த ராஜன்(51) என்பவா் புதன்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்களான மருதூரைச் சோ்ந்த வடிவேல்(51), மோகன்(54) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். இருசக்கர வாகனத்தை மோகன் ஓட்டிச் சென்றுள்ளாா். தண்ணீா்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்றபோது திடீரென்று இருசக்கர வாகனத்தில் இருந்து ராஜன் தவறி விழுந்தாா். இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். மற்ற இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.