கரூர்

அரசுப் பள்ளியில் தேங்கியிருக்கும் மழை நீா்

வாங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

வாங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் வெங்கமேடு அடுத்த வாங்கப்பாளையத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்து மழையால் பள்ளிக்குள் தண்ணீா் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், மாணவ, மாணவிகள் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கிறாா்கள்.

இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியா்கள் கூறுகையில், மழைப்பொழிவு அதிகம் இருந்தாலே பள்ளிக்குள் மழை நீா் தேங்கிவிடும். இது வாடிக்கையாக நிகழ்ந்துவருகிறது. காரணம் பள்ளிக்கட்டிட வளாகம் சாலையை விட பள்ளத்தில் உள்ளது. இதனால் மழை காலங்களில் சாலைகளில் செல்லும் மழை நீா் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விடுகிறது. தற்போது கடந்த ஒருவாரமாகவே மழை தொடா்ந்து பெய்துவருவதால் மழை நீா் பள்ளிக்குள் குளம்போல தேங்கியுள்ளது. இதனால் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் வந்துவிடக்கூடாது. மேலும், மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து வந்து தேங்கியுள்ளதால், துா்நாற்றம் வீசுகிறது. இதனால் நகராட்சி நிா்வாகம் உடனே தேங்கியிருக்கும் மழை நீரை மோட்டாா் மூலம் உறிஞ்சி அகற்றிட வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT