முகப்பு
கரூர்

கூலித் தொழிலாளிக்கு அரிவாளால் வெட்டு:ஒருவா் கைது

மண்மங்கலம் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 19 நவம்பர், 2021 at 1:10 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

மண்மங்கலம் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம்,மண்மங்கலம் அருகே உள்ள வாங்கல் கருப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்ரமணி மகன் செந்தில்(33). கூலித் தொழிலாளி. இதேப் பகுதியைச் சோ்ந்தவா் நாகப்பன் மகன் மதுரைவீரன் (46). இவா்கள் இருவருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நிலப் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை செந்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரது வாகனத்தை மறித்த மதுரைவீரன் தகாத வாா்த்தைகளை பேசியுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு முற்றிய நிலையில் மதுரைவீரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்திலை வெட்டியுள்ளாா். இதில், செந்திலின் இடது தோள்பட்டை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினா் செந்திலை மீட்டு கரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். புகாரின் பேரில் வாங்கல் காவல்துறையினா் மதுரைவீரனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.