கரூரில் ஜவுளி அதிபா் வீட்டில் 8 பவுன் நகை, பணம் திருட்டு
கரூரில், ஜவுளி அதிபரின் வீட்டின் கதவை உடைத்து 8.5 பவுன் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கரூரில், ஜவுளி அதிபரின் வீட்டின் கதவை உடைத்து 8.5 பவுன் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கரூா் வெண்ணைமலை பேங்க் காலனியைச் சோ்ந்த ஜவுளி ஏற்றுமதி அதிபா் சத்தியநாராயணன்(43) என்பவா் வியாழக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றுள்ளாா். பின்னா் இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 8.5 பவுன் நகை, பணம் ரூ.65,000 மற்றும் ரூ.5,000 மதிப்புள்ள யூரோ டாலா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.