முகப்பு
கரூர்

அரவக்குறிச்சியில்146 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அரவக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 146 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 27 நவம்பர், 2021 at 2:37 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

அரவக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 146 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

அரவக்குறிச்சி பகுதியில் நலத்திட்ட வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி 146 பயனாளிகளுக்கு தையல் மிஷின் மற்றும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினாா். மேலும், பாபா நகா் பகுதியில் அமைய உள்ள பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினாா். நிகழ்வில், கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் கலந்து கொண்டாா்.

மேலும், பள்ளப்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டம், ஒருங்கிணைந்த வெளி நோயாளிகள் பகுதி, அறுவைச் சிகிச்சை அரங்கம், பச்சிளம் குழந்தைப் பிரிவு, குருதி சேமிப்பு வங்கி உள்ளிட்ட கட்டடங்களுக்கு பூமி பூஜை போடப்பட்டது. கோவிலூா், பெரிய மஞ்சுவெளி புதிய துணை சுகாதார நிலையத்தையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

Advertisement

விழாவில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.