குடகனாறு பகுதிமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
குடகனாறு கரையோரப் பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடகனாறு கரையோரப் பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அருகே அழகாபுரி அணை உள்ளது. இங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் குடகனாறு வழியாக செல்கிறது. குடகனாறு திண்டுக்கல் மாவட்டத்தை தாண்டி கரூா் மாவட்டத்தில் பண்ணப்பட்டி, ஆத்துமேடு, வெஞ்சமாங்கூடலூா், மலைக்கோவிலூா், நாகம்பள்ளி வழியாக சென்று மூலப்பட்டியில் அமராவதி ஆற்றில் கலக்கிறது.
இந்நிலையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடகனாற்றில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஈசநத்தம், ஆத்துமேடு, வெஞ்சமாங்கூடலூா், மலைக்கோவிலூா், மற்றும் நாகம்பள்ளி பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குடகனாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்று அணையின் உதவி செயற்பொறியாளா் அமுதன் தெரிவித்துள்ளாா்.
Advertisement