முகப்பு
கரூர்

கரூா் வட்ட வழங்கல் அலுவலா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

 கரூா் வட்ட வழங்கல் அலுவலா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 கரூா் வட்ட வழங்கல் அலுவலா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக கரூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் கரூா் லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் தலைமையில் காவல் ஆய்வாளா் சாமிநாதன், உதவி ஆய்வாளா் பிரபு உள்ளிட்டோா் அடங்கிய 10 போ் கொண்ட குழுவினா் கரூா் வட்ட வழங்கல் அலுவலா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனா். ஆய்வின்போது, 2,920 புதிய குடும்ப அட்டைகள் வழங்கியுள்ளனா். ஆனால் ஆய்வில் ரூ.190 மட்டுமே இருந்துள்ளது. ஒரு காா்டுக்கு அரசு வசூலிக்கும் கட்டணம் ரூ.20 என்றால் 2,920 அட்டைகளுக்கு ரூ.1,460 இருக்க வேண்டும். ஆனால் ரூ.190 மட்டுமே இருந்ததால் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலா் உள்பட பணியாளா்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக லஞ்ச ஒழிப்பு அலுவலா் கூறுகையில், வட்ட வழங்கல் அலுவலகத்தில் முறைகேடு நடந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஆய்வுக்கு வருவது அவா்களுக்கு முன்பாகவே தெரிந்துள்ளது. அதனால் உஷாராகிவிட்டனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.