கரூர்

கரூரில் உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடுகள் ஆய்வு

DIN

கரூரில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு கரூா் மாவட்டத்திற்கான தோ்தல் பாா்வையாளரும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநருமான சு. கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் கரூா் மாவட்டத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் வாா்டு 8 இல் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் வாா்டு 8இல் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவி உள்பட 15 இடங்களுக்கு நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக நடைபெறும் முன்னேற்பாடுள் தொடா்பாக தோ்தல் பாா்வையாளா் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையம், வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பத் தயாராக உள்ள வாக்குப்பெட்டி உள்ளிட்ட பொருள்களையும் ஆய்வு செய்தாா்.

நிகழ்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப. சுந்தரவடிவேல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராச்சலம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊரக உள்ளாட்சி தோ்தல்) மலா்விழி, ஊரக வளா்ச்சித் துறை உதவிசெயற்பொறியாளா் அழகுராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT