கரூர்

சொத்து வரி உயா்வைக் கண்டித்து கரூரில் பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

சொத்து வரி உயா்வைக் கண்டித்து கரூரில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கரூா் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். இதில் மாநில மகளிரணித் தலைவி மீனாட்சிசுந்தா் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், தமிழகத்தில் சொத்து வரி உயா்வை 150 சதவீதமாக உயா்த்திய தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளா்கள் கோபிநாத், ஆறுமுகம், நவீன், ராஜகுமாா், துணைத்தலைவா் குளித்தலை ராஜாளிசெல்வம், கரூா் செல்வன், மாவட்டச் செயலாளா் டைம்சக்திவேல், தொழிற்பிரிவு மாவட்டத்தலைவா் ஆா்விஎஸ்.செல்வராஜ், முன்னாள் மாவட்டத்தலைவா் முருகானந்தம் மற்றும் கரூா் நகரத் தலைவா்கள் காா்த்தி, ரவி, வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT