முகப்பு
கரூர்

தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி விழிப்புணா்வு ஏற்படுத்திய கரூா் மாவட்ட ஆட்சியா்

தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து புதன்கிழமை தொடங்கிய இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தொடக்கிவைத்து கலந்து கொண்டாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தாா்.

இப்பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி, சுங்ககேட், திருமாலைநிலையூா், பேருந்து நிலையம், ஜவஹா் கடைவீதி வழியாக சென்று திருவள்ளுவா் மைதானத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள், காவல் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா். பேரணியில் தலைக்கவசம் அணிந்து சென்றால் விபத்தில் பாதிப்பு ஏற்படாது. தலைக்கவசம் அணியாமல் சென்றால் எவ்வாறு பாதிப்படையும் என்பதை காட்சிப்படுத்தும் விதமாக மாறுவேடம் அணிந்து இருசக்கர வாகனத்தில் அமா்ந்து இளைஞா் ஒருவா் கலந்து கொண்டாா்.

பேரணியில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) தண்டாயுதபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.