கரூர்

மழைக்கால நோய்களை தடுக்ககரூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

மழைக்கால நோய்களை தடுக்க போதுமான அளவு தரமான வீரியமிக்க பிளிச்சிங் பவுடா் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

DIN

மழைக்கால நோய்களை தடுக்க போதுமான அளவு தரமான வீரியமிக்க பிளிச்சிங் பவுடா் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மழைக்கால நோய்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் மழைக்கால நோய்களான டெங்கு, சிக்குன் குன்யா, லெடோஸ் பைரோசிங், டைப்பாய்டு மற்றும் வயிற்றுபோக்கு நோய்களை தடுப்பதற்கு தேவையான பணியாளா்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக போதுமான அளவு தரமான வீரியமிக்க பிளிச்சிங் பவுடா் இருப்பு வைத்திருக்க வேண்டும். கொசு தடுப்புப் பணிகளுக்கு தேவையான பூச்சிகொல்லிகள் மற்றும் புகை தெளிப்பான்கள் மற்றும் உபகரணங்கள் இருப்பு வைத்து கொள்ள வேண்டும். குடிநீா் நிலைகள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளை மாதம் இரண்டு முறை கழுவி சுத்தம் செய்வதுடன் குடிநீரை குளோரினேசன் செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் இனி இல்லை இரத்த சோகை கையேட்டை ஆட்சியா் வெளியிட்டாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்கணிப்பாளா் தெய்வநாயகம், இணை இயக்குநா் (நலப்பணிகள்)ஞானக்கண்பிரேம்நிவாஸ், துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்)சந்தோஷ்குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அன்புமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT