கரூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
பேரறிஞா் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் அதிமுகவினா் அண்ணா உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பேரறிஞா் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் அதிமுகவினா் அண்ணா உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பேரறிஞா் அண்ணாவின் 53 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், கரூா் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் மற்றும் கட்சியின் அமைப்புச் செயலாளா் ம. சின்னசாமி ஆகியோா் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், மாவட்ட துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, கரூா் முன்னாள் தொகுதிச் செயலாளா் எஸ். திருவிகா, பொதுக்குழு உறுப்பினா் மல்லிகா சுப்புராயன், நகரச் செயலாளா்கள் நெடுஞ்செழியன், விசிகே. ஜெயராஜ் , மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணி செயலாளா் ரங்கராஜ் உள்ளிட்ட அதிமுகவினா் பங்கேற்றனா்.